UPDATED : செப் 28, 2026 11:01 PM
ADDED : செப் 28, 2026 09:04 PM

அ நிறம் | அளவு
தாண்டிக்குடி:தாண்டிக்குடி - வத்தலக்குண்டு ரோட்டில் மரம் சாய்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தடியன் குடிசை பெரும்பாறை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றால் ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்தும் தாமதமானதால் பொதுமக்களே மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இவ்வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
