/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை கொட்ட இடம் இல்லாத அ.கலையம்புத்துார் சண்முக நதிக்கரையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு
/
குப்பை கொட்ட இடம் இல்லாத அ.கலையம்புத்துார் சண்முக நதிக்கரையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு
குப்பை கொட்ட இடம் இல்லாத அ.கலையம்புத்துார் சண்முக நதிக்கரையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு
குப்பை கொட்ட இடம் இல்லாத அ.கலையம்புத்துார் சண்முக நதிக்கரையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு
ADDED : பிப் 12, 2025 04:16 AM

நெய்க்காரப்பட்டி:: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கலையம்புத்துார் ஊராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லாததால் சண்முக நதிக்கரை ஓரத்தில் கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
மடத்துக்குளம் ரோடு, கொழுமம் ரோடு, அக்ரஹாரம் கடைவீதி கணேசபுரம் காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் போதுமான சுகாதார வளாகங்கள் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடமாக சாலை ஓரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் அதிகம் வரும் நிலையில் சுகாதாரக் கேட்டாலும் அவதிப்படுகின்றனர்.
நோய் தொற்று அபாயம்
யோகேஷ், வியாபாரி, கடைவீதி : குப்பை அள்ளுவது சரிவர நடப்பதில்லை. அவ்வாறு நடந்தாலும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் சண்முக நதி கரை ஓரத்தில் கொட்டி தீ வைக்கின்றனர்.
இதனால் சுகாதாரக் கேடு , காற்று மாசு ஏற்படுகிறது. தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் மேம்போக்காக குப்பை அகற்றும் பணி நடைபெற்றது. இருப்பினும் சண்முக நதியில் உள்ள குப்பையை முற்றிலும் அகற்றவில்லை. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உருவாகிறது.
ரோட்டில் நிற்பதால் விபத்து
சதீஷ், புரோகிதர்,அக்ரஹாரம் : வண்டி வாய்க்கால் அருகே உள்ள கொழுமம் ரோடு, மடத்துக்குளம் ரோடு சந்திப்பில் பஸ் ஸ்டாப் பகுதி சாலையை விட்டு விலகி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பஸ்சும் அந்த இடத்தில் நிற்பதில்லை. மெயின் ரோட்டில் நிற்பதால் விபத்து அபாயம் ,பொதுமக்கள் வெயிலில் நிற்கும் சூழல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் தொல்லை
நாகராஜன், ஒப்பந்ததாரர், கணேஷ் நகர் : அழகு நாச்சியம்மன் கோயில் முன்புறம் சாக்கடை வெளியேறாமல் தேங்கி நோய் தொற்று ஏற்படுத்துகிறது. நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. பள்ளி வளாகத்திற்கு அருகே குப்பை கொட்டப்பட்டு நோய் தொற்று ஏற்படுகிறது. சந்தை மண் கொட்டப்படாமல் உள்ளதால் சகதியாக உள்ளது, இதனை சரி செய்ய வேண்டும்.
பட்டா மாறுதலில் சிக்கல்
வேல்முருகன், இரும்பு வியாபாரம், காமராஜபுரம்: வீடுகளுக்கு பட்டா மாறுதல் செய்வதில் சிக்கல் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் தற்போது பட்டா மாறுதலோ, பத்திரம் பதியவோ இயலாத நிலை ஏற்படுகிறது.

