sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தயக்கம், தடுமாற்றங்கள் தகர்க்கப்பட்டு தன்னம்பிக்கை புதிய சிந்தனைகளை உருவாக்கிய அறிவியல் கண்காட்சி

/

 தயக்கம், தடுமாற்றங்கள் தகர்க்கப்பட்டு தன்னம்பிக்கை புதிய சிந்தனைகளை உருவாக்கிய அறிவியல் கண்காட்சி

 தயக்கம், தடுமாற்றங்கள் தகர்க்கப்பட்டு தன்னம்பிக்கை புதிய சிந்தனைகளை உருவாக்கிய அறிவியல் கண்காட்சி

 தயக்கம், தடுமாற்றங்கள் தகர்க்கப்பட்டு தன்னம்பிக்கை புதிய சிந்தனைகளை உருவாக்கிய அறிவியல் கண்காட்சி


ADDED : ஜன 18, 2026 07:27 AM

Google News

ADDED : ஜன 18, 2026 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்

மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்கில் ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்களது படைப்புகள் துறைவாரியாக பல அரங்குகளில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

பண்டையகால அறிவியல் பயன்பாடுகள் முதல் இன்றைய நவீன கால தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.

விண்வெளி அறிவியல், மருத்துவ அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பல தலைப்புகளில் மாணவர்களின் விளக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருந்தது. அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட்டு மனம் மகிழ்ந்தனர்.

எதிர்கால இந்தியாவின் காட்சி சாலை எஸ்.சித்தார்த்தன், பள்ளி தாளாளர்: ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சி மாணவர்களின் சிந்தனைகளை துாண்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.மொத்தத்தில் எதிர்கால இந்தியாவின் காட்சி சாலையாக அமைந்திருந்தது.

படைப்பாற்றலை வெளிப்படுத்தியது பி.நர்மதாஸ்ரீ, பள்ளி முதல்வர்: மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான அறிவியல் படைப்புகள் அவர்களது படைப்பாற்றல் எதிர்கால கனவுகள், கடின உழைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

கல்வி என்பது பாடப்புத்தகத்துடன் நிறைவடைவது மட்டுமல்ல கல்வியை அனுபவித்து புரிந்து கொண்டு செயல்படுத்தும் போது தான் முழுமையான கற்றல் நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.

மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் நோக்கில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு 6ம் வகுப்பு முதலே யிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

சுய முன்னேற்றத்திற்கான வழிகாட்டி கே.சுஜாதா, பெற்றோர் (தாய்கோ வங்கி, மதுரை மண்டல மேலாளர்): மாணவர்களின் சிந்தனைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

ஆசிரியர்களின் வழிகாட்டலும் மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது.

ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கையுடன் தங்களது படைப்புகளை விளக்கி கூறிய விதம் பள்ளியின் கல்வித்தரத்தையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியது. இத்தகைய அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

அறிவின் திறவுகோல் டாக்டர் ஆர்.முத்துராஜகுமாரி, பெற்றோர் (அரசு பல் மருத்துவர், எஸ்.வாடிப்பட்டி): மாணவர்கள் அனைவரும் மிகவும் அழகாக திறமையாக அறிவியல் கண்காட்சியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி நிர்வாகமும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதன் வாயிலாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வர முடிகிறது.

இதனால் மாணவர்களிடையே தயக்கமற்ற தலைமைத்துவத்தை வளர்க்க முடிகிறது.

மாணவர்களை அடிப்படை கற்றல் முதல் ஆக்க செயல்பாடுகள் வரையிலான அனைத்து நிகழ்வுகளிலும் ஊன்றுகோலாக இருந்து வழிகாட்டும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்கு உரியது.

கனவுகள் மெய்ப்படும் எம்.லக்சனாஸ்ரீ, மாணவி(பள்ளி அறிவியல் மன்ற தலைவர்): கண்காட்சி பாடப் புத்தகங்களை தாண்டிய ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளது. இது எங்கள் கனவுகளை நினைவாக்கும் அறிவியல் திருவிழா. பள்ளியில் அன்றாடம் நடைபெறும்

காலை வழிபாட்டு கூட்டம் முதல் துவங்கி துறை வாரியான மன்ற செயல்பாடுகள் போன்ற முன்னெடுப்புகளின் வாயிலாக எங்களது தயக்கங்களும் தடுமாற்றங்களும் தகர்க்கப்பட்டு தன்னம்பிக்கை ஊட்டப்பட்டு வருகிறது.

எங்கள் கண்டுபிடிப்புகளை பார்வையாளர்களிடம் விளக்கும்போது மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளின் வாயிலாக தயக்கமின்றி பேசும் திறன் வளர்ந்ததை உணர முடிகிறது.






      Dinamalar
      Follow us