/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவசியமாகிறது ஆய்வு: மக்கள் நலனுக்காக பலகாரக்கடைகளை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும்

ADDED : அக் 17, 2025 01:51 AM

மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் பட்டாசு ,துணி ,பலகார கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதில் பட்டாசு கடைகள் முறையான அனுமதி பெற்று வைக்கப்படுகிறது. புதிய துணிகளை வசதிக்கேற்ப பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.திடீரென முளைத்துள்ள இனிப்பு, பலகார கடைகளில் செய்யப்படும் பலகாரங்கள் பழைய எண்ணெய் ,தரம் இல்லாத பொருட்கள் கொண்டு செய்யப்படுகிறதா என்பதை மக்களாகிய நாம்தான் சற்று கவனத்துடன் வாங்க வேண்டும்.
தரம் இல்லாத பொருட்கள்,தடை செய்யப்பட்ட நிறைமூட்டிகளால் செய்யப்படும் பொருள்களால் உடல் உபாதைகள் ஏற்படும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படும்.
இதை தவிர்க்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் புதிதாக தோன்றிய திடீர் பலகார கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். முறையான வகையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா, காலாவதி தேதி குறிப்பிட்டப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். தவறிய கடைக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.