/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு கால்முறிவு
/
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு கால்முறிவு
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு கால்முறிவு
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு கால்முறிவு
ADDED : பிப் 16, 2025 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் யாகப்பன்பட்டி அந்தோணியார் கோயில் அருகே நடந்த மோதலில் அதே பகுதியை சேர்ந்த ஆர். ஜேசுராஜ், எஸ். சேசுராஜ் உள்ளிட்ட 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கின் முக்கிய நபரான யுவராஜ் 35, நல்லாம்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். முட்புதரில் பதுங்கி இருந்த யுவராஜ் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்.
அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.