ADDED : அக் 05, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்,உதவியாளர் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட செயலர் பத்மாவதி தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் செல்வதனபாக்கியம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் .பிரபாகரன், மாவட்ட நிர்வாகி பாலசந்திரபோஸ் பங்கேற்றனர்.