/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பஞ்சாமிர்தம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை
/
பழநி பஞ்சாமிர்தம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை
ADDED : மார் 15, 2024 01:49 AM
பழநி:பழநி பஞ்சாமிர்தம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் அறிக்கை:
பழநி கோயில் பஞ்சாமிர்தம் லாரி மூலம் எந்த ஆவணமும் இன்றி எடுத்துச் செல்லப்பட்டது. வி.எச்.பி., நிர்வாகிகள், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் லாரி கொண்டு செல்லும்ஆவணங்களை கேட்டனர். ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஹிந்து அமைப்பினர் கோயில் நிர்வாகத்தின் மீது போலீசில் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வி.எச்.பி., நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
பக்தர்கள் காணிக்கை பணத்தில் கோயில் நிர்வாகம் அதிக அளவில் பஞ்சாமிர்தம் தயாரித்து வீணாக்கி உள்ளது. இதற்கு பொறுப்பேற்றுக்கொள்வது யார். வி.எச்.பி., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
பஞ்சாமிர்த தயாரிப்பு, காலாவதி ஆகும் அளவு, பஞ்சாமிர்தம் தயாரிக்க வாங்கும் பொருட்கள் குறித்த வெள்ளை அறிக்கையை கோயில் நிர்வாகம் வெளியிட வேண்டும். வி.எச்.பி., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

