தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆடி அமாவாசை தர்ப்பணம்

ஆடி அமாவாசை தர்ப்பணம்

ஆடி அமாவாசை தர்ப்பணம்


UPDATED : ஆக 12, 2026 10:53 PM

ADDED : ஆக 12, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:53 PM ADDED : ஆக 12, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை: பரிகார ஸ்தலமாக விளங்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சூரிய பகவானை வழிபட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்ச தீபம் ஏற்றி மூலவரை வழிபட்டனர். டி.எஸ்.பி., இளஞ்செழியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் நீராட முடியாமல் சிரமம் அடைந்தனர்.

பழநி:

பழநியில் ஆடி அமாவாசை பிதுர் வழிப்பாட்டிற்காக சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் அளித்தனர். இதில் அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். எள், பச்சரிசி பிண்டம் தயாரித்து குடும்ப பிதுர்களை நினைத்து வழிபட்டு, ஆற்றில் கரைத்தனர். சண்முக நதியில் அமலை செடிகள் அதிகம் இருந்ததால் பிதுர்க்கடன் செலுத்த வந்தவர்கள் சிரமம் அடைந்தனர். அதன்பின் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி சென்றனர். வீடுகளில் பெரியோர்களின் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us