sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் விபத்து

/

மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் விபத்து

மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் விபத்து

மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் விபத்து


ADDED : அக் 10, 2025 03:23 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

பழநி - தாராபுரம் ரோட்டில் குடிநீர்குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது . இப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது .இந்த இடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால் இதை முழுமையாக சரி செய்ய வேண்டும்.அழகேஷ், பழநி.

.................--------சேதமான மீட்டர் பெட்டி

திண்டுக்கல் மாலப்பட்டி அபிராமி நகரில் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .மக்கள் நடமாடும் பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜ்குமார் மாலப்பட்டி.

..................--------

பாதியில் நிற்கும் பணி

வேடசந்துார் கொல்லம் பட்டறை பஸ் ஸ்டாப் அருகே கட்டப்பட்டுள்ள காவிரி குடிநீர் தொட்டி முறையாக சிமென்ட் பூசாமல் விடப்பட்டுள்ளது. பாதியில் விடப்பட்ட தொட்டி பணியை முறையாக சீரமைக்க வேண்டும்.ஆர்.கந்தசாமி, வேடசந்துார்.

..........---------குப்பையால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் அருகே தோட்டனுாத்து ரோட்டில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .குப்பையும் சிதறி கிடக்கிறது .தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை அகற்ற வேண்டும். மல்லிகா, மாலப்பட்டி.

....---------............மேல்நிலை தொட்டி சேதம்

திண்டுக்கல் கூட்டுறவு நகர் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்துள்ளது .கட்டட கம்பிகள் வெளியே தெரிவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். தொட்டியை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன், திண்டுக்கல்.

................----------மேம்பாலத்தில் தேங்காய் மட்டை

ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோடு கொல்லப்பட்டி குளம் மேம்பாலத்தில் தேங்காய் மட்டைகள் சிதறி கிடப்பதால் டூவீலர்களை இயக்க சிரமமாக உள்ளது . சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட பலர் காயமடையும் நிலையும் உள்ளது.-கோபி, ஒட்டன்சத்திரம்.

..........----------தொற்றுநோய் பரவும் அபாயம்

நல்லமனார்கோட்டை அருகே டி.கொடிக்காபட்டி ரேஷன் வடக்கு தெருவில் கழிவு நீர் செல்ல பாதை இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது .இதனால் துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது . எஸ்.பரமேஸ்வரி. டி. கொடிக்காபட்டி.

............---------






      Dinamalar
      Follow us