/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு! டூவீலர்களில் 2க்கு மேற்பட்டோர் பயணிப்பதால் விபரீதம்
/
சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு! டூவீலர்களில் 2க்கு மேற்பட்டோர் பயணிப்பதால் விபரீதம்
சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு! டூவீலர்களில் 2க்கு மேற்பட்டோர் பயணிப்பதால் விபரீதம்
சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு! டூவீலர்களில் 2க்கு மேற்பட்டோர் பயணிப்பதால் விபரீதம்
UPDATED : பிப் 06, 2026 09:01 AM
ADDED : பிப் 06, 2026 06:10 AM

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது. டூவீலர்களில் இருவருக்கு மேல் பயணிப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மாவட்டத்தில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இருந்து டூவீலர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
டூவீலர்களை ஓட்டுபவர்களில் பலர் சாலை விதிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. மதிப்பதும் இல்லை. ரோடுகளில் நினைத்த இடங்களில் திரும்புகின்றனர். இண்டிகேட்டர் சிக்னல் போட்டுவிட்டு உடனே திரும்புகின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காமல் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலர் திடீரென பிரேக் பிடிப்பதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போது டூவீலர்களில் இருவருக்கும் மேல் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்குவதால் விபத்தில் பலியாகும் நிலையும் தொடர்கிறது. டூவீலர் ஓட்டும் சிலர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்காமலே இயக்குகின்றனர். வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் போது தான் டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா என போலீசார் சோதனை செய்கின்றனர்.
விபத்து ஏற்படும் முன்பே டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா என்பதை சோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் முகப்பு விளக்கு வெளிச்சம் எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச செய்வதால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. சிலர் ஒரு வழிப் பாதை என்ற அறிவிப்பு பலகையை பார்த்த பின்பும் அதை மதிக்காமல் வாகனங்களில் செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
டூவீலர்களில் செல்வோர் டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளனரா என்பதை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய வேண்டும். இருவருக்கு மேல் செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருவருக்கு மேல் செல்லும்போது வாகனத்தை ஓட்டுபவர் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரோடுகளில் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்கினாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
எஸ்.கே.பழனிச்சாமி,பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ,ஒட்டன்சத்திரம்.

