ADDED : ஜன 19, 2024 05:34 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள அச்யுதா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா சேர்மன் புருஷோத்தமன்தலைமையில் நடந்தது. 9ம் வகுப்பு மாணவர்கள் ராகவ்ராம், விகாஷ் வரவேற்றனர். தாளாளர் சுந்தராம்பாள் புருஷோத்தமன், முன்னாள் ஐ.ஜி., பாரி, செயலாளர்கள் மங்களராம்,
காய்திரி மங்களராம், பட்டாபிராம், முதன்மை முதல்வர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். பொது தேர்வு, நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கினர்.
11ம் வகுப்பு மாணவிகள் தேவதாரிணி, சுதிக்ஹா, சிவதாரணி, ருத்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஞானபிரியதர்னி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன்,ராஜசுலோக்சனா, பிரபாகரன், ராஜசேகர், பிரபு, ஜான் கிரிஸ்டோபர், ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் செய்தனர். மாணவிகள் பவதாரணி, திவ்யாஸ்ரீ நன்றி கூறினர்.

