sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பொருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு செய்தியுடன் சேர்க்கவும்

/

 பொருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு செய்தியுடன் சேர்க்கவும்

 பொருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு செய்தியுடன் சேர்க்கவும்

 பொருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு செய்தியுடன் சேர்க்கவும்


ADDED : டிச 31, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தாடிக்கொம்பில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருமஞ்சனம் அர்ச்சனைகள், உற்ஸவர் பல்லக்கில் வலம் வருதல் நடந்தன. பரமபத வாசலுக்கு பெருமாள் வந்து அடைந்ததும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷங்கள் எழுப்பினர். திண்டுக்கல், வேடசந்துார் ,ஒட்டன்சத்திரம் என பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுபோல் திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயில், எம்.வி.எம்.நகர் வெங்கடா ஜலபதி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

ரெட்டியார்சத்திரம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளினார். இதையொட்டி மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. கருட வாகனத்தில் உள்பிரகார வலம் வருதல் நடந்தது.

பின்னர் சொர்க்கவாசல் வழியே சுவாமி எழுந்தருள வீர ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், செங்கமலவள்ளி அம்மன், கருடாழ்வார், அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவர்கள், திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தினர். பள்ளி முதல்வர் முத்துலட்சுமி, தமிழாசிரியர் தமிழ்மணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கன்னிவாடி: கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.

-வடமதுரை: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்த புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். காத்திருந்த பக்தர்கள் கோஷமிட்டு வணங்கினர்.

கருட வாகனத்தில் பெருமாள் காலை 7:00 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு ரத வீதிகள் வழியே பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றார்.

அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் சன்னதி திரும்பினார்.

பழநி : மேற்குரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்க அதன் வழியே கருட வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருளினார்.

கோயில் யானை கஸ்துாரி மரியாதை செலுத்தியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்க அதன் வழியே ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சுவாமி எழுந்தருளினார்.






      Dinamalar
      Follow us