/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கூடுதல் அலைபேசி பாதுகாப்பு மையங்கள் தேவை
/
பழநியில் கூடுதல் அலைபேசி பாதுகாப்பு மையங்கள் தேவை
ADDED : டிச 16, 2024 06:33 AM

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ஐயப்ப சீசனை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதலாக அலைபேசி பாதுகாப்பு மையங்களை திறக்க வேண்டும்.
பழநி முருகன் கோயிலுக்கு ஐயப்ப சீசனை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகரித்துள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதித்தது. அலைபேசியை பாதுகாக்க கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதி பகுதியில் அலைபேசி பாதுகாக்கும் மையங்கள் உள்ளது. தற்போது கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் அலைபேசி பாதுகாக்கும் மையங்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக படிப்பாதை அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களில் அதிக பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்கின்றனர். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதலாக அலைபேசி பாதுகாப்பு மையங்களை திறக்க வேண்டும்.

