ADDED : பிப் 27, 2026 07:27 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் பிப்ரவரியில் இயல்பான மழையளவைக் காட்டிலும் அதிகமான மழை பெய்துள்ளது'' என டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:திண்டுக்கல் மாவட்டத்தில் பாலாறு பொருந்தலாறுஅணையில் 42.03 (65 அடி ) அடி , பரப்பலாறு அணையில் 73.57 (90 அடி ) அடி. வரதமாநதி அணையில் 46.95 (66.47 அடி )அடி, குதிரையாறு அணையில் 62.06 (79.99 அடி ) அடி,குடகனாறு அணையில் 18.15 (27.07 அடி ) அடி, நங்காஞ்சியாறு அணையில் 21.55 (39.37 அடி ) அடி என்ற அளவில் நீர் உள்ளது. மாவட்டத்தில் 2025ல் ஜனவரி முதல் பிப்ரவரி வரைகுளிர்காலத்தில் 36.12 மி.மீ., கோடை காலத்தில் மார்ச் முதல் மே வரை 182.75 மி.மீ.,,தென்மேற்கு பருவ காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை 118.62 மி.மீ.,, வடகிழக்கு பருவ காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை 334.51 மி.மீ., மழையளவு பெய்துள்ளது. பிப்ரவரியில் 44.7 மி.மீ., மழை பெய்ய வேண்டும். தற்போது 23 வரை 35.2 மி.மீ.,மழை பெய்துள்ளது. பிப்ரவரியில் இயல்பான மழையளவைக் காட்டிலும் அதிகமான மழை பெய்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தயக்கம் இன்றி துவக்கலாம் என்றார்.
