/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை
/
வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை
ADDED : மார் 06, 2026 06:42 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டியில் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொலையான சம்பவத்தில் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை நடத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் பெருமாள் 23. இவர் ஜன.,30ல் ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் ஆண் உறுப்பை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் பாறையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் 20, அவரை கொலை செய்தது தெரிந்தது. இடையகோட்டை போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரவிவர்மன் தலைமையில் சுரேஷ்குமார், செல்வராஜ், மதன்குமார் அடங்கிய குழுவினர் கொலையான பெருமாளின் தாய், சகோதரிகளிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.
பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய்காந்தி, டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், காளீஸ்வரி உடன் இருந்தனர். கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

