ADDED : ஆக 26, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: துாய்மை பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும். கலெக்டரின் உத்தரவின்படி ஒருநாள் சம்பளமாக ரூ.646 வழங்க வேண்டும்.
பணியின் போது இறந்தால் ரூ.10 லட்சம், மாதந்தோறும் 4 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஆதிதமிழர் மக்கள் பேரவை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் பழனிராஜா தலைமை வகித்தார். ஆதிதமிழர் துாய்மை பணியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார்.