ADDED : மார் 03, 2024 06:29 AM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே ராஜகாபட்டியில் அ.தி.மு.க., சார்பில் கண் சிகிச்சை முகாம் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணி, மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் கே.சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஏற்பாட்டில் விருதுநகர் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.
500க்கு மேற்பட்டோர் கண்புரை, கிட்டப் பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.
சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர்.
