/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை வெயில் தாக்கம் தேவை அறிவுரை
/
கோடை வெயில் தாக்கம் தேவை அறிவுரை
ADDED : ஏப் 25, 2025 06:55 AM
திண்டுக்கல்: கோடை வெயிலின் தாக்கம் அதிகிரித்து வரும் நிலையில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான பாதுகாப்பு அறிவுரைகளை மாவட்டங்கள் தோறும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள், வயதானவர்கள் பாதிக்கின்றனர். பகல் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகளை வெளியே அழைத்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகளை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் வழங்குவது அவசியமாகிறது.
இது குறித்த அறிவுரைகளை பொது இடங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

