UPDATED : ஜூன் 16, 2026 06:33 PM
ADDED : ஜூன் 16, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கம் நாளை(ஜூன் 18) திண்டுக்கல் சபரி மஹாலில் நடக்க உள்ளது.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வேளாண் உணவு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், சவால்கள், அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள், அரசு வழங்கும் ஆதரவு திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.
பங்கேற்க விரும்புவோர் 95002 61727 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
