/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
அ.தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 18, 2026 06:03 AM

திண்டுக்கல்: தே.ஜ., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.,வை கண்டித்து திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் தலைமை வகித்தனர். நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி, பா.ஜ, மாநிலப் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், பா.ம.க., மாவட்டத் தலைவர் ஜான்கென்னடி அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசாமி, த.மா.கா., மாவட்ட தலைவர் ரதிஸ், புதிய நீதிக்கட்சி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிசாமி, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், பேரவைச் செயலாளர் பாரதிமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், சேசு, முரளி, இக்பால் திரளாக பங்கேற்றனர்.

