ADDED : பிப் 11, 2026 06:24 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி, துணைச் செயலாளர் பிரேம்குமார், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமதுஇக்பால், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் வீரமார்பன், கவுதம் கார்த்தி, கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.
