/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெள்ளை காகிதத்தை காட்டி வெற்று ஆட்சி என நிரூபித்து விட்டனர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
/
வெள்ளை காகிதத்தை காட்டி வெற்று ஆட்சி என நிரூபித்து விட்டனர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
வெள்ளை காகிதத்தை காட்டி வெற்று ஆட்சி என நிரூபித்து விட்டனர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
வெள்ளை காகிதத்தை காட்டி வெற்று ஆட்சி என நிரூபித்து விட்டனர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
ADDED : செப் 26, 2025 02:33 AM

வேடசந்தூர்:தி.மு.க., ஆட்சியில் தொழில் துவங்கியதற்கான வெள்ளை அறிக்கை கேட்டால் அமைச்சர் ராஜா வெற்று வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். இவர்களுடைய ஆட்சி வெற்று ஆட்சி என்பதை நிரூபித்து விட்டனர் என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பழனிசாமி பேசியதாவது:
திறமையற்ற முதல்வர் ஆளுகின்ற காரணத்தால் மக்களுக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. திண்டுக்கல் துணை மேயர் மகனுக்கு கர்நாடக போலீசார் போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக சம்மன் வழங்கி உள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு தி.மு.க., வினர் துணை நிற்கின்றனர்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை பாராட்ட தெலுங்கானா முதல்வர் வருகிறார். அந்த அளவிற்கா தமிழக கல்வி வளர்ச்சி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தகுதி தேர்வில் தகுதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் 992 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், இதில் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கூறுகிறார். தொழில் துவங்கியதற்கு வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார் அமைச்சர் ராஜா. தி.மு.க. ஆட்சி வெற்று ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி நிரூபித்து விட்டனர். வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் நிறைந்த பகுதி. ஆனால் மின் கட்டண உயர்வு பல மடங்கு உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடும் நிலையில் உள்ளன. அரசு மது கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கொள்ளையடிக்கிறார்கள். மின் கட்டணம், வீட்டு வரி, விலைவாசி அனைத்தும் உயர்ந்துவிட்டது.
இவ்வாறு பேசினார்.