ம.நே.ஜ., நிர்வாகி கையை கடித்த அ.தி.மு.க., பிரமுகர்
ம.நே.ஜ., நிர்வாகி கையை கடித்த அ.தி.மு.க., பிரமுகர்
ADDED : பிப் 08, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: பிலாத்து வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி கணேசன் 47. மனித நேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய நிர்வாகி.
அதே ஊர் அ.தி.மு.க., பிரமுகர் குமரேசன் 34, இருவரும் உறவினர்கள். குமரேசனிடம் கணேசன் வாங்கிய கடன் பாக்கி ரூ.1500 தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் குமரேசன் கடித்ததில் கணேசனின் இடது கை விரல் ஒன்று துண்டானது. வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.
