ADDED : பிப் 14, 2026 06:28 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அ.தி.மு.க., கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில், கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் தி.மு.க, அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து 14 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் , மாநகர் மேற்கு, தெற்கு, கிழக்கு ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில் திண்டுக்கல் திருச்சி ரோடு என்.ஜி.ஓ., காலனி உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார். பா.ஜ., மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், அ.ம.மு.க., மாவட்டச் செயலாளர் நல்லசாமி, த.மா.க., மாவட்டத் தலைவர் ரத்திஸ், த.ம.மு.க., மாவட்டச் செயலாளர் முத்துரத்தினவேல், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜமோகன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பாரதிமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதிச் செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமதுஇக்பால், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, மாவட் தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், தகவல் தொழிநுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் வீரமார்பன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்:: கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கு முயலும் தி.மு.க.: மாவட்ட இணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பாலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சண்முகவேல், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, முன்னாள் நகரச் செயலாளர் எஸ். நடராஜன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.பி.வி.மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தவமணி, ஐ.டி.விங்க் மாவட்ட துணைத் தலைவர் சீராபாலா, நகர பொருளாளர் கே.கிட்டான், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கே.ராசியப்பன், அ.ம.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நத்தம் : நத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஜெ பேரவை இணைச்செயலாளர் ஆர். வி. என். கண்ணன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம்விஸ்வநாதன் பேசியதாவது: எந்தவித மக்கள் நலத்திட்டங்களிலும் அக்கறை செலுத்தாமல் பொய்யான வாக்குறுதிகள் என தி.மு.க., மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் விழிப்புடன் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை மக்கள் நிராகரித்து விட்டனர். மீண்டும் ஆட்சி அமையாது என்ற உளவு பிரிவு மூலம் உண்மையை தெரிந்து கொண்டு இறுதி நேரத்தில் எதையாவது செய்து மக்களை ஏமாற்றி ஓட்டு பெறலாம் என்ற நோக்கத்தில் பல திட்டங்களை அவசரமாக செய்து வருகின்றனர்.
அதில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளனர். ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் சிக்கி வட்டி கட்ட முடியாமல் தினறும் தமிழ்நாடு அரசை இவர்களின் ஊதாரி தனமான செயல்பாடு கடுமையாக பாதிக்கும் என்றார்.
