ADDED : ஜூன் 10, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி: பழநி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக டி.எஸ்.பி., வினோதினி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார், பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, மலைவாழ் கிராமங்களான புளியம்பட்டி பொருந்தல், சண்முகம்பாறை, கணவாய் மேடு பகுதிகளில் மதுவிலக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் சாராய ஊரல் ,கஞ்சா ஏதும் பயிரிடப்பட்டுள்ளதா என விபரங்கள் சேகரிக்கப்பட்டன. மலைவாழ் மக்களுக்கு மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப் பட்டன.
