ADDED : மார் 04, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: கீரனூர் பேரூராட்சியை சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் குப்புசாமி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜ், சுப்பிரமணி, கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, துணைத்தலைவர் அப்துல் முக்கூர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.
