ADDED : ஏப் 14, 2026 08:05 PM
அ நிறம் | அளவு
நத்தம்:-நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மூன்றுலாந்தர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி, தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கத்தமிழன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
