/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திற்கு நீட்டிப்பு ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

ADDED : மே 15, 2025 02:35 AM
பழநி:''திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக ''மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறினார்.
பழநி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் காத்திருப்பு அறை, வாகன நிற்கும் இடம், நகரும் படிக்கட்டு, உணவகம் உள்ளிட்ட பணிகள் அம்ருத் பாரத் திட்டத்தில் நடந்து வருகின்றன. இதை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும். மேலும் பழநி வழியே கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.