ADDED : நவ 01, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் 36 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அணி சார்பாக தமிழகத்திலிருந்து திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் பள்ளி 9ம் வகுப்பு பயிலும் மாணவர் யோகேஷ் பூரண சந்திரன் தலைமையில் பங்கேற்ற குழுவினர் பரிசு பெற்றுள்ளனர்.
இவரை கலெக்டர் சரவணன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் உடன் இருந்தனர்.
பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன், முதல்வர் குணசேகரன், சக்தி, துணை முதல்வர் ஹெர்பர்ட், ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, ஷர்மிளாபேகம், அந்தோணி தாஸ், பாண்டீஸ்வரி, லில்லி, முதன்மை மேலாளர் பிரபாகரன், கார்த்திகேயன் வாழ்த்தினர்.

