/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தை பருவத்திலே மேடையேற்றி தன்னம்பிக்கை தனி திறமைகளை வெளிகொணரும் அற்புத நிகழ்ச்சி
/
குழந்தை பருவத்திலே மேடையேற்றி தன்னம்பிக்கை தனி திறமைகளை வெளிகொணரும் அற்புத நிகழ்ச்சி
குழந்தை பருவத்திலே மேடையேற்றி தன்னம்பிக்கை தனி திறமைகளை வெளிகொணரும் அற்புத நிகழ்ச்சி
குழந்தை பருவத்திலே மேடையேற்றி தன்னம்பிக்கை தனி திறமைகளை வெளிகொணரும் அற்புத நிகழ்ச்சி
UPDATED : ஜன 25, 2026 06:30 AM
ADDED : ஜன 25, 2026 06:03 AM

நத்தம்:பள்ளி பருவத்திலே மாணவர்களை மேடையேற்றி தன்னம்பிக்கை, தனித்திறமை, அறிவியல் சிந்தனை, படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் திண்டுக்கல் சிலுவத்துார் சாலை பி.ஆர். என்.பி., கல்வி குழுமத்தின் எஸ்.எஸ்.எம்.வி., நர்சரி ,பிரைமரி பள்ளியில் டாலென்ஷியா-2026 மாணவர்கள் திறன் உணர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ், ஆங்கில பேச்சு, கதை சொல்லுதல்,யோகா, தனி நடிப்பு, நடனம், நாட்டியம், நாடகம், குறுஞ்செய்தி, வீணை, பறை இசைத்தல், ஆங்கில உரையாடல் போன்ற போட்டிகளில் குழந்தைகளின் பள்ளி பருவத்திலே கலந்து கொள்ள செய்து, தயக்கம், தடுமாற்றங்களை தகர்த்து தன்னம்பிக்கை புதிய சிந்தனைகளை உருவாக்கப்படுகிறது.
பள்ளி பருவத்திலே அவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கின்றனர்.
பெற்றோர் ஒத்துழைப்பு சிறப்பு டாக்டர் இரா.சந்திரமோகன், பள்ளி தாளாளர்: சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் தனித்திறனை குழந்தை பருவத்திலிருந்தே கண்டறிந்து அதனை வளர்ப்பதற்காக டாலன்ஷியா- 2026ஐ நடத்தினோம்.
இதில் ஆசிரியர்களின் பங்களிப்பும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது. வரும் ஆண்டுகளிலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னும் சிறப்பாக நடத்த முயற்சி செய்வோம்.
எதிர்காலத்தை நிர்ணயிக்க வழிமுறை எ.ஜெபரோஸ் சுபா, பள்ளி முதல்வர்: பள்ளி என்பது மதிப்பெண் சார்ந்தது மட்டுமல்ல. மாணவர்களை சமுதாயத்திற்கு ஏற்புடைய, எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு களம் என்பதை கருத்தில் கொண்டு திறன் சார்ந்த செயல்முறைகளையும், தரமான கல்வியையும் தருகிறோம்.
நாங்கள் ஏற்படுத்தி கொடுத்த ராம்ப் வாக் எனும் வளைவு நடை மாணவர்களின் தன்னம்பிக்கை மேலோங்க செய்தது. அதனை பெற்றோர்களும் பெருமிதத்துடன் ரசித்தனர்.
நம்பிக்கையோடு பயணிப்பு தாரணி,பெற்றோர், திண்டுக்கல்: குழந்தைகள் ஒவ்வொருவரின் தனித்திறமையினை தெரிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் மேடையை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
சிறுவயது முதலே குழந்தைகள் இவ்வாறு மேடையில் ஏறும்போது அவர்களின் அச்ச உணர்விலிருந்து விலகி தன்னம்பிக்கையை வளர்த்து நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள். என் குழந்தைக்காக நான் தேர்ந்தெடுத்த பள்ளி மிகச் சிறந்த பள்ளி என நான் பெருமைப்படுகிறேன்.
துாண்டுகோலாக இருக்கும் சுமன்தேவி, பெற்றோர், திண்டுக்கல்: டாலன்ஷியா நிகழ்ச்சியானது மாணவர்களுடைய நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், குழுப்பணி உணர்வினை உருவாக்குவதாகவும் அமைந்தது.
புத்தகப் பாடத்தை மட்டுமே பிரதானமாக கொள்ளாமல் குழந்தைகளின் திறன்சார்ந்த வளர்ச்சிக்கும் வழிகோலுவதாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டு பாராட்டப்படுகின்றனர்.
இது எதிர்காலத்தில் அவர்கள் பட்டப்படிப்பு படிக்கவும், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கவும் துாண்டுகோலாக இருக்கும்.
மிக முக்கியமான ஒன்று தங்கராஜ், பெற்றோர், திண்டுக்கல்: மாணவர்கள் திறன் உணர் நெகிழ்ச்சியான டாலன்ஷியா ஒருவரின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் போட்டி நிகழ்வாகும். அந்த விதத்தில் வளரும் பள்ளி குழந்தை களுக்கு மிக முக்கியமாக வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக உள்ளது.
எனது மகள் பயின்றுவரும் எஸ்.எஸ்.எம்.வி., பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.
எனது குழந்தைகள் ஏதாவது ஒரு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். இது குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

