/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரத்த சோகை தடுப்பு கருத்தரங்கம்
/
ரத்த சோகை தடுப்பு கருத்தரங்கம்
ADDED : பிப் 21, 2026 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: உலக ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில் ரத்த சோகை விழிப்புணர்வு கருத்தரங்கம் ,வினாடி வினா போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியை பேரின்ப ராணி தலைமை வகித்தார். ஆசிரியை சாந்தி சத்யசீலா வரவேற்றார். ஓய்வு மாவட்ட கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் டேனியல் முன்னிலை வகித்தார்.
இந்திய மருத்துவக் கழக கிளைச்செயலாளர் ஆசைத்தம்பி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் உத்தமன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை விளையாட்டு பிரிவு ஆசிரியர் ஆஸ்டின் ராஜ்குமார் செய்திருந்தார்.

