/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2026 06:22 AM

திண்டுக்கல்: தேர்தல் வாக்குறுதிபடி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் சிறப்பு பென்ஷன், அகவிலைப்படி வழங்க வேண்டும், அடிப்படை காலமுறை ஊதியம் ரூ.19ஆயிரத்து 500 வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தி, தமிழக சத்துணவு அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் இந்திரா, செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜசேகரன், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகி நடராஜன் பேசினர். நிர்வாகிகள் தமிழ்செல்வி, செல்வராஜ், அண்ணாதுரை பங்கேற்றனர்.

