UPDATED : அக் 14, 2026 09:47 PM
ADDED : அக் 14, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் வனச்சரகத்தில் கால்நடை, வளர்ப்பு பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாமை வனத்துறை நடத்தியது. ரேஞ்சர் மாரியப்பன், கால்நடை டாக்டர் சத்யா, கால்நடை வளர்ப்போர் பலர் கலந்து கொண்டனர்.
மன்னவனுார், கவுஞ்சி, பூண்டி கிராமத்தில் முகாம்கள் நடந்தன. வனப்பகுதி அருகே உள்ள கால்நடை, வளர்ப்பு பிராணிகள் மூலம் வன உயிரினம், மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இம்முகாம் நடத்தப்பட்டது.
