தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அண்ணாதுரை நினைவு நாள்

 அண்ணாதுரை நினைவு நாள்

 அண்ணாதுரை நினைவு நாள்


ADDED : பிப் 04, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.,மேற்கு மாவட்டம் சார்பில் அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், சேசு, முரளி, இக்பால், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் வீரமார்பன், கவுன்சிலர் பாஸ்கர் கலந்துகொண்டனர்.

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க., சார்பில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us