
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை மேற்கு ரதவீதி முனியாண்டி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பால், தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
கோயில் அர்ச்சகர் சவுந்தரம் வருடாபிஷே கத்தை நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை பவுர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

