ADDED : ஏப் 19, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
நத்தம்;நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
