UPDATED : ஆக 26, 2026 05:22 PM
ADDED : ஆக 26, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி முருகன் கோயில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் சன்னதி வீதியில் உள்ள வேளீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திரவியங்கள், மூலிகைகள் பூர்ணாஹூதி செய்யப்பட்டு கோயில் பிரகாரத்தை வலம் வந்து கலசங்களில் இருந்த புனித நீரால் மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
