/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிள்ளைமார் பெருமக்கள் பேரவை ஆண்டு விழா
/
பிள்ளைமார் பெருமக்கள் பேரவை ஆண்டு விழா
ADDED : ஆக 19, 2025 12:59 AM

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை 23 வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி முதன்மை தலைவர் ரகுராம் தலைமை வகித்தார். பேரவை தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் பாலசுந்தர் வரவேற்றார். கவுரவ ஆலோசகர் கமலவேலன் பேசினார். மேயர் இளமதி, முன்னாள் மேயர் மருதராஜ் பங்கேற்றனர்.
திருமண தகவல் மன்ற அறிக்கையை கணேசன் வாசித்தார்.
பேரவை சார்பில் புதிய கட்டடம், இளைஞர் அணி, மகளிர் அணி தொடங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அங்குவிலாஸ் அங்கிங்கு இசைக்குழு டாக்டர் செல்லமுத்தையா, வ.உ.சி., அறக்கட்டளை ஆர்.எஸ்., சந்திரசேகர், சாந்தினி, பழனிச்சாமி, எம்.கே.ஆர்., காசிநாதன், எலைட் அன் எலைட் பாலசுந்தர், அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் கர்னல் வீரமணி, பொறியாளர் ராஜேஷ், வி.எம்.ஆர்., பில்டர்ஸ் வீரமார்பன்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செழியன், வெள்ளிமலை.
ஏ.கே.வி., வித்யாலயா பள்ளி தாளாளர் ராமலிங்கம், செயலாளர் சண்முகம்பிள்ளை, பேரவை துணைத்தலைவர் பிச்சை மாணிக்கம், துணைச்செயலர்கள் பத்மநாபன், பெரியசாமி, எஸ்.கே.சி., டெக்ஸ்டைல்ஸ் எஸ்.கே.சி., குப்புசாமி, ஆடிட்டர்கள் ராமலிங்கம், சண்முகவேலு, ராமசுப்பிரமணியம், நிர்வாககுழு உறுப்பினர்கள் வேலுமஹால் பழனிச்சாமி, ஆட்டிர் கோமதிநாயகம், சிவசங்கர் ஸ்டீல்ஸ் சிவசண்முகராஜன், கார்த்திகேயன், பெஸ்ட் கார்ஸ் பழனிவேல்ராஜ், எம்.எஸ்.ஆர்., சாய்பிரசாத், எம்.பி., வாட்ச் கம்பெனி பிச்சைமாணிக்கம், கே.எஸ்., பில்டர்ஸ் பொறியாளர் காளிதாஸ், லேடீஸ் சாய்ஸ் கடை உரிமையாளர் மலையான், எம்.பி., எலக்ட்ரிக்கல் பைப்ஸ் பொறியாளர் விஜயன், சிங் செராமிக்ஸ் பரிமளநாதன்.
ஏ.கே.ஆர்., எக்ஸ்பிரஸ் செந்தில், நிலா மகளிர் பியூட்டி கிளினிக் மேக்கப் ஸ்டுடியோ பாலகிருஷ்ணன், ஆர்.எஸ்., மில்ஸ் கார்த்திகேயன், கிப்டி பேக்ஸ் தங்கம், பாலு பங்கேற்றனர்.
துணைச்செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.