/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடுபொருள் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா, பொதுக்குழு கூட்டம்
/
இடுபொருள் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா, பொதுக்குழு கூட்டம்
இடுபொருள் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா, பொதுக்குழு கூட்டம்
இடுபொருள் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா, பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 26, 2026 05:28 AM

திண்டுக்கல்: உரம், விதை விற்பனையை நிரந்தர உரிம முறையில் மாற்றி அமைக்க, விவசாய இடுபொருள் வியாபாரிகள் மாநில அரசை வலியுறுத்தி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் நடராஜன் தொகுத்து வழங்கினார். மாவட்டச் செயலாளர் சிவராமன் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ஜான்சன் பொருளாதார அறிக்கை வாசித்தார்.
2026- - 2029 வரையான புதிய நிர்வாகிகளாக, மாவட்டத் தலைவர் கோபிகண்ணன், செயலாளர் சிவராமன், பொருளாளர் லட்சுமணமணிகண்டன் பொறுப்பேற்றனர்.
வேளாண் இணை இயக்குனர் கோவிந்தராஜ், தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் தயாளன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், தேசிய துணைத் தலைவர் மோகன், துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
மத்திய, மாநில சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நுண்ணுாட்ட உரங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி நிர்ணயத்தை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைத்ததற்கு நன்றி தெரிவித்தல், விவசாய பூச்சி மருந்துகள் அனைத்தையும் ஒரே சீரான 5 சதவீத வரி விகிதத்தில் கொண்டுவர வலியுறுத்துதல், உரம் மற்றும் விதை விற்பனைக்கு நிரந்தர உரிம முறையில் மாற்றி அமைக்க மாநில அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
செயற்குழு உறுப்பினர் சக்திவேல் நன்றி தெரிவித்தார்.

