/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : டிச 02, 2025 08:36 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீருவீட்டில் 3 பேருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் வத்தலக்குண்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கண்டக்டரான நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டி மாரிமுத்துவிடம் பி.எஸ்.சி., படித்த தன் மகன்கள் இருவர், தம்பி மகன் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
அதன்படி ராஜேந்திரனிடம் கரூரைச் சேர்ந்த குமாரை மாரிமுத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதன்பின் இருவரிடம் ராஜேந்திரன் பல்வேறு தவணைகளில் ரூ.36.10 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற குமார், மாரிமுத்து தலை மறைவாகினர்.
குற்றப்பிரிவு எஸ்.ஐ., வனிதா மற்றும் போலீசார் இதுகுறித்து மாரிமுத்து, குமார், அவரது மனைவி பூமகள், உறவினர்கள் சுசித்ரா ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

