/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.10 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
ரூ.10 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : அக் 08, 2025 02:47 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தெண்டு நிறுவனம் பெயரில் ரூ.10 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவான கோவையைச் சேர்ந்த நிறுவன பெண் உதவித்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
பழநியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் 'டிபாசிட் செய்வோருக்கு அவர்கள் கொடுக்கும் பணத்தின் அடிப் படையில் 2 சதவீதம் வட்டிப்பணம் மாதந்தோறும் ஏஜன்ட்கள் மூலமாக வழங்குகிறோம். ரூ.5 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செலுத்துபவர்களுக்கு வட்டி கொடுப்பதுடன், ஊக்கத்திற்காக தங்க நாணயமும் கொடுக்கிறோம்'என ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பி 2019 முதல் 2022வரை கோவை, துாத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சேலம், சென்னை, பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் என 52 பேரிடம் ரூ.10 கோடியே 2லட்சத்து 20 ஆயிரம் முதலீடு பெற்றுள்ளனர். வாக்குறுதிபடி வட்டி தராமல் ஏமாற்றினர். பணம் முதலீடு செய்தவர்கள் அசலை திருப்பிக்கேட்க தொண்டு நிறுவனம் மூடப்பட்டதோடு செந்தில்குமார் உட்பட அனைவரும் தலைமறைவாயினர்.
இப்புகாரில் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செந்தில்குமார், ஜெயந்தியை கைது செய்தனர். கோவை மாவட்டம் நீலாம்பூரில் பதுங்கி இருந்த தொண்டு நிறுவன உதவித்தலைவர் தீபலட்சுமி 39, நேற்று கைது செய்தனர்.