ADDED : ஏப் 08, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பழநி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 2 லட்சத்து 30 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் 1340 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஏப்.6ல் துவங்கிய இப்பணி ஏப்.30 வரை தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கின்றன. பழநி மையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா , திண்டுக்கல் மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணிகளை கண்காணித்து வருகிறார்கள் .
