/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோம்பைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
கோம்பைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கோம்பைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கோம்பைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : ஜன 20, 2026 07:50 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பழநி தாலுகா கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி அவ்வூர் மக்கள் மனு வாயிலாக கலெக்டர் சரவணனிடம் முறையிட்டார்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனா பங்கேற்றனர். பழநி தாலுகா கணக்கன்பட்டி ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நாராயணசாமி, முன்னாள் வார்டு உறுப்பினர் தங்கராசு தலைமையில் வந்த ஊர் மக்கள் அளித்த மனுவில், கணக்கன்ப்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமம் கோம்பைப்பட்டி. இங்கு 2200 பேர் வசிக்கிறோம். 1312 வாக்காளர்கள் உள்ளனர்.
கோம்பைப்பட்டி பழநி சட்டசபைத் தொகுதியிலும், கிராமத்தை நிர்வகிக்கும் கணக்கன்பட்டி ஊராட்சி ஒட்டன்சந்திரம் சட்டசபைத் தொகுதியிலும் உள்ளது. இக்கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம், நடுநிலைப்பள்ளியும் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பைப்பட்டியை 9 கி.மீ., தொலைவில் உள்ள பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் இணைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த செயல் எங்களுக்கு பாதகமாக உள்ளது.
கணக்கன்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வரி, சொத்து, இதர தேவைகளுக்காக தற்போது 4 கி.மீ., துாரத்தை தினமும் கடந்து சென்று வருவதால் சிரமப்பட்டு வருகிறோம்.
கோம்பைப்பட்டியை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் இணைத்து இருப்பதால் 9 கி.மீ., சென்று வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கருதி கோம்பைபட்டியை அரசு தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி ஊராட்சி கூடம் நகரில் வசிக்கும் சக்திவேல், துரையன், சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில், பண்ணைக்காடு பகுதியில் இருந்து கூடம்நகர் வரை 8 கி.மீ., துாரம் உள்ளது.
இதில் 5 கி.மீ., துாரம் உள்ள ரோடு ஊராட்சி ஒன்றியம் சார்பிலும், 4 கி.மீ., துாாரம் வனத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ளது.
8 கி.மீ., துாரம் வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்கியும் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கப்படாததால் மக்கள் சிரமம்படுகின்றனர் இதை தவிர்க்க ரோடு அமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளனர்.
திண்டுக்கல் நாகல் நகர் சமூக ஆர்வலர் ராஜேஸ்கண்ணன் வழங்கிய மனுவில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் மலைக்கோட்டை அடிவார பகுதியில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்கார்களின் வருகை அதிகளவில் இருந்தது.
மலையடிவார பகுதி முழுவதும் குப்பை, கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அளவில் மாறியுள்ளது.
மாநகராட்சி கண்டு கொள்வது இல்லை. மலையடிவார பகுதிகளை சுத்தப்படுத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளார்.

