ADDED : செப் 28, 2025 03:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அச்யுதா பப்ளிக் பள்ளியை சேர்ந்த 35 மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளையும் கருத்துகளை கூறினர்.
இவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், பள்ளியில் நடைபெறும் விழாக்களில் தாமாக முன் வந்து ரத்ததான முகாம், பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, மழைகால விழிப்புணர்வு முகாம், சாலைப்பாதுகாப்பு வாரங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டனர்.
இவர்களை பள்ளி செயலாளர்கள் மங்களராம் , காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் சந்திர சேகரன், உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் திஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, அருண் ஷோரி, மகேஷ்வரி,விஜய சாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜன், முதன்மை மேலாளர் பிரபாகரன், மேலாளர்கள் ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.