UPDATED : அக் 15, 2026 09:20 PM
ADDED : அக் 15, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். மாணவி ஞானசவுந்திரி மும்முறை தாண்டும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவன் சரவணக்குமார் குண்டு எறிதலில் 3ம் இடம் பெற்றார்.
பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களை தலைமை ஆசிரியர் நிர்மலா, பி.டி.ஏ., தலைவர் வெங்கடேஷ்வரன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், போஸ், சந்திரா பாராட்டினர்.
