ADDED : மார் 25, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்:ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்ய அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
