ADDED : ஜூன் 08, 2026 12:16 AM

அ நிறம் | அளவு
நத்தம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் காலபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல் குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் காலபைரவர், வேம்பார்பட்டி விநாயகர் கோயில் காலபைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
