/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உதவி பேராசிரியர் டூவீலர் எரிப்பு
/
உதவி பேராசிரியர் டூவீலர் எரிப்பு
ADDED : நவ 04, 2024 03:43 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் தர்மரின் 40, டூவீலரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் எரித்தவர்களை தேடுகின்றனர்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் மைக்கேல் ஆண்டவர் குருசடி தெருவைச் சேர்ந்த தர்மர் தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தர்மர், தன் குடும்பத்தினருடன் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்தனர்.
நேற்று காலை தர்மர் டூவீலர் எரிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் எரித்தவர்களை தேடி வருகின்றனர்.
இதே பகுதியில் சில நாட்களுக்கு முன் ஜேம்ஸ் என்பவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரையும் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்தனர். அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.