/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேட்டைக்காரன் கோயில் விழாவில் 50 ஆடுகளை வெட்டி படையல்-
/
வேட்டைக்காரன் கோயில் விழாவில் 50 ஆடுகளை வெட்டி படையல்-
வேட்டைக்காரன் கோயில் விழாவில் 50 ஆடுகளை வெட்டி படையல்-
வேட்டைக்காரன் கோயில் விழாவில் 50 ஆடுகளை வெட்டி படையல்-
ADDED : பிப் 19, 2025 02:21 AM

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வேட்டைக்காரன் சுவாமி கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை வெட்டி சமைத்து சுவாமிக்கு படையலிடப்பட்டது. பின் நடந்த விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா மாசியில் நடக்கிறது.
இந்தாண்டு திருவிழா நேற்று முன் தினம் நள்ளிரவு சுவாமிக்கு பொங்கல் வைப்பது துவங்கியது. அதன் பின் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம், ஆட்டுக்கறி கிராமத்தினரால் சமைக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த 3 -ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.