ADDED : ஜன 12, 2026 05:11 AM

நத்தம்: -தமிழ்நாடு தடகள சங்கத்தின் புதிய செயலாளராக பதவி ஏற்றுள்ள சிவகுமார், சங்கத்தின் இணைத் தலைவராக பதவி ஏற்றுள்ள துரை ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா ஜி.டி.என்., கலைக் கல்லுாரி கூட்டரங்கில் நடந்தது.
நிகழ்வில், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் பொருளாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக் கழகச் செயலாளர் சண்முகம், மாவட்ட இறகு பந்து கழகச் செயலாளர் நாராயணன், மாவட்ட கூடைப் பந்தாட்ட கழகச் செயலாளர் யூசுப் அன்சாரி, தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்திரராஜன், நத்தம் ராம்சன்ஸ் கல்விக் குழும தாளாளர் ராமசாமி, எம்.எஸ்.பி., பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக பதவி ஏற்ற நிர்வாகிகளை பாராட்டி, பணி சிறக்க அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாநிலச் செயலாளர், இணைத் தலைவர் பேசுகையில், 'மாநில பொறுப்பு வழங்கிய தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் லதாவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மாநில கைப்பந்து சங்க செயலாளர் நன்றி தெரிவித்தார்.
